சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே! 1960

Rate this item
(1 Vote)

பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் 'அகதிகள்' என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே !

அவர்களுக்கு வீடு ;

வியாபாரத்திற்குப் பணம் உதவியெல்லாம்!

நம்மவன் கதி?

கஞ்சிக்கு இல்லாமல் சாகும் நிலை.

தற்கொலை பண்ணிக் கொள்ளூம் அவல நிலை.

இதற்கெல்லாம் நமது நாடு நம்மிடம் இருந்தால் நடக்குமா?

சிலோனுக்கு இங்கிருந்து கள்ளத்தோணி ஏறிப்போகிறான்.

அவன் நம்மைப் பார்த்துக் கள்ளத்தோணி என்கிறான்.

குடி உரிமை இல்லாத மக்களாக இலட்சக்கணக்கில் அங்கே நம்மநாட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

எது தேசத்துரோகம்?

இதைக் கேட்க- கண்டிக்க - இதை உணர்ந்த தக்க முறையில் பரிகாரம் தேடுவதற்கு ஒருவரும் இல்லையே!

இதையெல்லாம் எடுத்துச் சொல்லி இந்த அக்கிரமங்களை ஒழிக்க, நம் நாடு நமக்கு ஆகவேண்டும் என்று கேட்டால், அது தேசத்துரோகம் என்கிறார்கள்.

நான் கேட்கிறேன் எது தேசத்துரோகம்?

யார் தேசத்துரோகிகள்?

(தந்தை பெரியார்-மே.1960- (அபாயச் சங்கு –பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம் பதிப்பு -1983 )

Read 18 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.