தமிழன்பர் மகாநாடு -ஈ.வெ .கி . புரட்சி - தலையங்கம் - 31.12.1933

Rate this item
(0 votes)

சென்னையில் இம்மாதம் 23, 24 களில் கூடிய தமிழன்பர் மகாநாடு ஒரு சுயநலக் கூட்டத்தார்களால் கூட்டப்பட்டு அதன் பலன்களை அச்சுய நலக் கூட்டத்தவர்களுக்கே பயன்படுமாறு உபயோகப்படும்படியான முறையில் கடத்தப்போவதாக நம் புரட்சியில் பல கட்டுரைகளும், தலையங்கமும் எழுதப்பட்டன. அதைக் கண்டிப்பாய் பகிஷ்கரிக்கும்படி இரண்டு ஜில்லா மகாநாடுகளும், பல சங்கங்களும் தீர்மானங்கள் நிறைவேற்றி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 

தென்னாட்டில் தமிழ் கற்று அதில் பாண்டித்யம் பெற்று அன்பு பூண்டி ருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மலித்திருக்க, தமிழென்றால் வேப்பங்காயெனக் கருதும் சில ஆரியப்பார்ப்பனர்கள் பெருக்காக தங்களுக்கு இசைந்த இரண்டொரு தமிழர்களையும். இரண்டொரு மகம்மதியர்களையும், கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழர் மகாநாடு என்று போடாது தமிழன்பர் மகாநாடு என்று ஓர் மகாநாட்டைக் கூட்ட ஆரம்பித்ததே இம்மகாநாட்டைக் கூட்டியவர்களின் சூழ்ச்சியை விளக்கப் போதிய சான்றாகும். 

அடுத்தபடியாக அதன் நடவடிக்ககைகளில் அங்கம் பெற்றவர்களாகிய புத்தகாலய பிரசார சங்கத்தலைவர், வரவேற்புக்கழகத் தலைவர் முதலியோர்களின் யோக்கியதைகளைப் பற்றிக் கவனித்தால் அதன் உட் கருத்து விளங்காமற் போகாது. அதாவது தோழர் கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் தமது ஜீவனமாகிய வக்கீல் தொழிலில் இன்றையத் தினத்தில் கோர்ட்டுகளில் எல்லா நடவடிக்கைகளும் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும் என்பதாக ஏற்பட்டு விட்டால் இவருக்குள்ள தமிழின் அன்பு அப்பொழுதே விளங்கிவிடும். அடுத்தபடியாக "மகாமகோபாத்யாயர்" பட்டம் பெற்றவரைக் கவனித்தால் தமிழ் மக்களும் ஆரியமக்களும் அவரி டம் ஒரு பதவியை எதிர்பார்க்கிற காலத்தில் அவரது தமிழன்பு, வடமொழி யன்பு. தமிழரன்பு ஆசியரன்பு என்பது எத்தகையதென விளங்கும்? மகாநாட்டுத் திறப்பாளர் விஷயத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்ட கல்லூரியில் பார்ப்பன ஆதிக்கத்திற்கோ, தாக்ஷண்யத் திற்கோ, பயத்திற்கோ உள் பட்டதாகக் காணப்படும் தமிழ் பாஷைக்கும், தமிழர்களுக்கும் ஏற்படுத்தி நடத்தப்பட்டு வரும் முறையே போதுமான அத்தாக்ஷியாகும். 

அடுத்தபடியாகத் தலைவரவர்களைப்பற்றி அவருக்கு ஏற்பட்டிருக்கும் கல்வி உத்தியோகத்தில் முதன்மையான உத்தியோகம் அமையப்பெற்றிருந்தும் அக்கல்வி இலாக்காவில் தமிழுக்கு எவ்வளவு ஆதிக்யம் வழங்கப் பெற்றிருக்கிறதென்பதை யோசித்தால் தானே விளங்கிவிடும். மகா நாட்டுத் தலைமைப் பதவியில் தீர்மான காலங்களில் ஒன்றில் நடந்து கொண்ட மாதிரியும் மனப்பான்மையையும், நடுநிலைமைக்கும் போதுமான காரணங்களாகும். 

தவிர இம் மகாநாடானது ஒற்றுமையைக் கொண்டதும், நல்லெண் ணத்தின் முதிற்சியைக் கொண்டதாகவும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அறிகுறியாகிய போலீஸ் பந்தோபஸ்தை விரும்பி ஒரு போலீஸ் கமிஷனர். 2 சப் இன்ஸ்பெக்டர். ஒரு சார்ஜெண்டு. 12 கான்ஸ்டேபிள்கள் அடங்கிய ஒரு போலீஸ் கச்சேரியாக மகாநாட்டை ஆக்குவித்து அதில் வந்தவர்களினு டைய கையெழுத்துகளை வெள்ளைக்காகிதமாகிய முச்சலிக்கையில் கையெழுத்து வாங்கிய பிறகே மகாநாட்டை ஆரம்பிக்கப்பட்டதெனின் அதற்கிருக்கும் யோக்கியதையும், மனப்பான்மையும், நல்லெண்ணமும். நம்பிக்கையும் எத்தன்மை வாய்ந்த தென்பது கவனித்தவர்களுக்கே புலப்படும். 

தவிர தமிழ் எழுத்துக்களைப் புதுப்பித்து சீர்ப்படுத்தவேண்டிய தீர்மானத்துக்கு அநுசரணையாக ஏற்படுத்திய கமிட்டியை ஏற்படுத்தும் போது ஷே கமிட்டிக்கு ஒரு பெண்மணியையாவது அங்கத்தினராக தேர்ந் தெடுக்காதது பெண்ணுலகத்திற்கே கல்வி விஷயத்தில் பொறுப்பேற்று நடத்தும் அறிவும், ஆசையும், ஆற்றலும். இல்லை எனப் பகிரங்கப்படுத்தி அவமானத்தை உண்டாக்கும் தீர்மானமாகுமென்றே கருத இடமேற்படுகிறது. திறப்பாளர் ராஜா சர். அண்ணாமலையார் தமது திறப்பு விழாவாற்று முறையில் ஆற்றிய சொற்பொழிவில் “தமிழன்பர்களே அறிவு அனைவருக்கும் பொது அது ஒருவருக்கே உரியதன்று. அதனை ஆடவரும் பெற வேண்டும், மகளிரும்பெறவேண்டும், ஏழையும் பெறவேண்டும் தனிகரும் பெற வேண்டும்” என்று கூறி இருப்பதற்கும் மேல்கண்ட கமிட்டியில் பெண் மணிகளில் ஒருவரையாவது சேர்க்காதிருப்பதற்கும் சம்பந்தம் எப்படி இருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு தமிழனும் இன்னும் பள்ளியில் ஒளவைப்பிராட்டியின் நீதிமொழிகளைக் கற்று அதன்படி நடக்கிற வனைத் தான் பண்டிதனென்றும், பெரியோர் என்றும் பெயர் பெற்று விளங்குவதையும் நாம் பார்க்கலாம். அப்படி இருக்க போர் வீரர்களாகவும், நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், தபாலாபிசர்களாகவும், கல்வியதி காரிகளாகவும் உத்தியோகங்களில் பெண்மக்களைச் சேர்த்து நடத்தி வருகிற இக்காலத்திலும் கூட நாம் நமது பெண்மக்களுக்காக கல்வி சம்பந்த மாகக்கூட ஒரு ஆதிக்கம் தருவதற்கு முற்பட விரும்பவில்லையானால் அது மிகமிக பிற்போக்கான காரியமென்றே சொல்லுவோம். ஏனெனில் இந்த தமிழன்பர் மகாநாட்டில் சுமார் 1-15 பண்டிதைகளான பெண் மணிகள் விஜயமாகியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் பெரிய பெரிய மகாநாட்டுக் கூட்டங்களில் பேசும் திறமையும் பத்திரிக்கைகளில் கட்டுரை கள் எழுதும் ஆற்றலும் அமைந்தவர்களாகவிருக்கும்பொழுதும் புறக் கணித்ததானது விவசாயி நிலத்தைப் பண்படுத்தாது வித்தை ஆராய்வது போலும், அழகுறச் செய்து கொள்ளுபவர் தலையிருக்க உடலை அலங் கரிப்பது போன்றதென்பதே நமது கருத்து. ஆகையால் இத்தகைய மகா நாடுகள் நம் நாட்டிற்காவது, மக்களுக் காவது பயனளித்து முற்போக்கடை யும் வழிகளில் உபயோகப்படும் என்கிற முறையில் நடத்தப்படவில்லை என்பது நமதபிப்பிராயம். மற்ற நடவடிக்கைகளைக் குறித்து பின் தெரிவிக் கப்படும். 

புரட்சி - தலையங்கம் - 31.12.1933

Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.