பாலிய விவாகம் (குடி அரசு - உரையாடல் - 01.04.1928)

Rate this item
(0 votes)

குழந்தை : என்னடி அம்மா நேற்று அவன் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?

தாயார் : அடி பாவி அது நகையல்ல ; தாலி அதை ராத்திரி அறுத்தாய்விட்டது.

குழந்தை : எனக்குத் தெரியவில்லையே.

தாயார்: ராத்திரி 11 -மணி இருக்கும் நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய். ஆதலால் உனக்குத் தெரியவில்லை.

குழந்தை : அதை ஏன் அறுத்தார்கள்

தாயார்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்துபோய் விட்டானல்லவா. அதனால் அறுத்துவிட்டார்கள்.

குழந்தை : அவன் போனால் போகட்டுமே. வேறு யாரையாவது கட்டச் சொல்வதுதானே, அதையேன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய், அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன். ஊ! .ஊ!! .ஊ!!!

(குடி அரசு - உரையாடல் - 01.04.1928)

 
Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.