சூழ்ச்சியும் ஏமாற்றமும் (குடி அரசு - செய்திக் குறிப்பு - 19.02.1928)

Rate this item
(0 votes)

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணாமலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீமுதலியாருக்கு பல வரவேற்புகளும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும், ஸ்ரீமுதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்கின்ற பொறாமையின் பேரிலும், ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணாமலைக்குவராமல் இருக்கும்படி செய்ய வேண்டுமெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட்றேட்டிடமிருந்து மாற்ற வேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கிவிட்டார்கள். நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும், கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் கிரமப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்துவிட்டன. பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றமடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்கு போதுமான காரணம் இல்லையென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார்களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய்விட்டது.

மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண்ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலியாரும் போவார் என்றே தெரிகின்றது.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 19.02.1928)

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளைவித்து வருவதாக தெரிகின்றது. 7, 8 பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டதாகவும், அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதுவும் திருவண்ணாமலைக் கேசு போலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும் போல் தெரிகின்றது. அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லையாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்பனரல்லாத வக்கீல் போக வேண்டியிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த கேசின் செலவுக்காக திருவண்ணாமலை கேசு செலவுக்கு பொதுஜனங்கள் உதவியது போலவே உதவ வேண்டும் என்று அப்பீல் செய்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - வேண்டுகோள் - 19.02.1928)

இஸ்லாமிய ஊழியன்

ஒத்துழையாமைக் காலத்தில் இருமுறை சிறைசென்று பலவருஷம் சிறைவாசம் செய்த தேசபக்தர் திண்டுக்கல் ஜனாப் வி.கே. தங்கமீரான் சாயபு அவர்கள் “இஸ்லாமிய ஊழியன்” என்ற தமிழ் வாரப் பத்திரிகையொன்று ஆரம்பிக்கப் போவதாய் நாம் தெரிவிக்கப்பட்டிருக்கிறபடியால் பத்திரிகையை நாம் ஆவலோடு எதிர்பார்ப்பதுடன் பொதுஜனங்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 19.02.1928)

 
Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.