கட்டாயக் கல்வியும் ஆச்சாரியாரும் - குடிஅரசு - 13.08.1949.

Rate this item
(1 Vote)

மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றுவிடக்கூடாது என்பதில் ஆரிய முன்னோர்களைப்போல, உலகிலே வேறு எவருமே நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. பார்ப்பனீயம் வகுத்த சமுதாய அமைப் பில், நாற்ஜாதி முறையில், என்றைக்கும் மேற்ஜாதியாகவே இருந்து வரும் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டத்தினரின் நன்மையையும் வாழ்வையும் ஒட்டியே வருணாசிரமம் வகுக்கப்பட்டது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. என்ன காரணத்திற்காக வருணாசிரமம் என்பதை அந்த ஆரிய முன்னோர்களே விளக்கிச் சென்றிருக்கிறார்கள்.

இந்த வருணாசிரம அமைப்பைக் காப்பாற்றினால்தான், மேறி ஜாதியினரான சிறு கும்பலுக்கு, சுகபோக வாழ்வு நிரந்தரமாக இருந்து வரும் என்பதை அறிந்த அவர்கள், வருணாசிரமத்தை விட்டு விலகிவிடத் தூண்டும் கல்வியறிவை, முக்கியமாகத் தாழ்ந்த ஜாதியினர் பெற்றுவிடக் கூடாது என்கிற போக்கை மிரட்டியும், பயப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும் கைக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுடைய மனுதர்மங்களே அதற்குச் சாட்சி. 

இந்த நெடுங்கால அமைப்பு முறைக்கு ஒரு அளவு ஆட்டங் கொடுக்க வைத்தது வெள்ளையரின் நுழைவு. அதாவது வருணாசிரம வழியைவிட்டு, அவனவன் அறிவுக்கும் ஆசைக்கும் தகுந்தபடி, எந்தத் தொழிலில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்கிறதான ஒரு துணிச் சலை, தாழ்ந்த ஜாதியினர் என்று பார்ப்பனர்களால் பிரித்து வைக்கப் பட்டு அழுத்தி வரப்பட்டவர்களுக்குள் ஒரு சிலரிடமாவது உண்டு பண்ணி விட்டது வெள்ளைக்காரன் பங்காளியாயிருந்து நடத்திய ஆட்சி, இந்த ஆட்டத்தைத் தவிர்ப்பதற்காக அக்காலப் பார்ப்பனர்கள் கல்வித் துறையில் மற்றவர்கள் முன்னேறிவிடக் கூடாது என்கிற திட்டத்தோடு எவ்வளவு பெருந்தொந்தரவுகளைக் கொடுத்துத் தடுத்துவந்தார்கள் என்பதையும், தப்பித்தவறி இரண்டொருவர் முன்னேறினாலும் அவர்களை எப்படியெல்லாம் அழுத்தி வந்தார்கள் என்பதையும் நாம் சொல்ல வேண்டியதில்லை, கல்வித்துறையில் அரசாங்கத்திலுள்ள பழைய ஆதாரங்களே கூறும்.

காலப்போக்கில் நால்வருணம் என்பது, பார்ப்பனர் - அல்லாதார் என்று சொல்லப்படக்கூடிய இரண்டு பிரிவாகவே பார்ப்பனர்களால் கையாளப்பட்டுவர, ஒடுக்கப்பட்டு வந்த பார்ப்பனரல்லாதார் ஒரு இயக் மத்தையே தோற்றுவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இயக்கம் வளர்ச்சி பெற்ற, நடுநிலைமையிலுள்ள சில வெள்ளையர்களை நியாயம் என்று உணரவைத்த நிலையிலே, அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் முன் னேற்றத்திற்குத் தனி வேலி போடப்படவேண்டியதுதான் என்கிற நிலைமை ஏற்பட்டது எப்போதோ, அப்போதிருந்தே பார்ப்பனர்கள் மிக மிகக் கடுமையாக, ஆனால், மறைவாக, இந்த வேலியைப் பிடுங்கி எறியும் நாசவேலையில் தீவிரமாக ஈடுபட்டனர். இதை எடுத்துக்காட்டிய தால்தான் பார்ப்பனத் துவேஷிகள் என்று பட்டம் பெற்றோம்.

வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரை இங்குள்ள மக்களின் (வேதனையை உணர வைத்தோமென்றாலும், பார்ப்பனர்களோடு ஒப்பந் தம் செய்துகொண்ட. வெள்ளை ஏகாதிபத்தியம் நாட்டு மக்கள் எல்லோ ருமே பெற்றிருக்க வேண்டிய கல்வியறிவைப் பற்றிக் கொஞ்சம் கவலைப் படவில்லை. இதற்குக்காரணம் கூட்டு ஒப்பந்தக்காரர்கள் இருவரும் என்று நாம் குறிப்பிட்டோம். இந்த நாட்டு நலனில் அக்கறையே இல்லாத வெள்ளையன் வெளியேறிவிட்டால் இந்த நிலை இருக்கமாட்டாது என்றனர் நம் காங்கிரஸ் தோழர்கள்.

வெள்ளையன் வெளியேறிவிட்டால், 100 - க்கு 12 பேர்தான் படித்தவர்கள் என்கிற நடப்பு எப்படி இந்த நாட்டில் இருந்துவிடும் என்று கேட்ட நம் காங்கிரஸ் தோழர்கள், வெள்ளையன் வெளியேறி விட்டான் ' என்று அவர்களாலேயே சொல்லப்பட்டுவிட்ட இந்த இரண்டு ஆண்டுகளில், எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கை என்ன? இதை உண்ணும் உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் கேட்கவில்லை, கேட்க வகையும் தெரியாதவர்கள் “வெள்ளையன் வெளியேறிவிட்டால் அறிவுப்பஞ்சம்” என்பதே அகன்றுவிடும் என்பதாக அன்று பேசினோமே!

அதைப் பற்றி உடனடியாக ஒன்றும் செய்வதற்கு நாம் வக்கற்றவர்கள் என்றாலும், மக்கள் முன் அப்படிக் காட்டிக்கொண்டு விடலாமா? ஆகவே, அந்தப் பிரச்சினையைப் பற்றி ஏதாவது பேசிக் கொண்டாவது இருப்போம் என்று நினைத்து காங்கிரஸ் தோழர்களுக் குள்ளாகவே கட்டாயக்கல்வி பற்றி இப்போது பேசப்படுகிறது.

இன்னுமொரு 100, 200 வருஷங்கள் கழிந்தாலும், கட்டாயமாக அனைவரும் படித்தே ஆகவேண்டும் என்கிற நிலைமை எப்படியும், யாராலாவது, உண்டாக்கப்பட்டேவிடும் என்பதை உலகப் போக்கை அறிந்த நம் அருமைப் பார்ப்பனத் தோழர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அந்த நிலைமை ஏற்படுவதற்கு, ஏற்படும் என்று எண்ணுவதற்கு அவர்களுக்கு எப்படி மனம் பொறுக்கும்? கட்டாயமாக அனைவரும் படித்துவிட்டால், சுய சிந்தனையற்ற, அறியாமைக் குட்டையில் உழலும் தன்மான மற்றவர்களை நாட்டில் எப்படிக் காணமுடியும்? பார்ப்பனீ யத்துக்குத் துதி பாடுபவர்கள் மறைந்து, பார்ப்பனீயமே பஞ்சாய்ப் பறந்து விடுமே? புரோகித வர்க்கத்தைப் புல் முளைக்கச் செய்யும் கட்டாயக் கல்வியைக் கனபாடிகள் எப்படி வரவேற்பார்கள்? என்றெல்லாம் எவருமே எண்ணத் தகுந்த வகையில் தான் இந்த மாதம் 8 ஆம் தேதி பம்பாயில் பேசிய இந்துஸ்தான் கவர்னர் ஜெனரல் ஆச்சாரியாரவர்கள் பேசி இருக்கிறார்.

கட்டாயக் கல்வி என்கிற பேச்சையும், அதற்காக எடுத்துக் கொள் ளப்படும் சிறு முயற்சிகளையும் தோழர் ஆச்சாரியார் அவர்களைப்போல உண்மையில் வெறுப்பவர்கள் யாருமே இல்லை என்பதுதான் நம் கருத்து. முன்பு அவர் சென்னைப் பிரதமராய் வீற்றிருந்த நேரத்தில், கட்டாயக் கல்வியைப் பரப்ப, அவர் கூறிய வினோதமான திட்டத்தை நாம் மறந்து விடவில்லை. வாத்தியார் இல்லாமல், பள்ளிக்கூடம் இல்லாமல், எல்லோருக்குமே கல்வி, என்ற அவரின் அட்டை மாட்டும் கல்வித் திட்டத்தை யார்தான் மறந்து விடமுடியும்?

இப்படிப்பட்ட ஆச்சாரியார்தான் இன்று கவர்னர் ஜெனரலாய் இருக்கும் நேரத்தில் கட்டாயக் கல்வியைப் பற்றிப் பேசி இருக்கிறார். குழந்தைகளை அவர்களுடைய குடும்பக் கலைப் பயிற்சியிலிருந்து முற்றிலும் தனியாகப் பிரித்துக் கட்டாயமாகக் கல்வியைப் புகட்ட நிர்ப்பந்திக்கக் கூடாதாம். பெற்றோர்கள் செய்துவரும் தொழிலை மேற்கொள்ளத்தக்க விதமாக வாரத்தில் 3 நாள் மட்டும் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம். இந்த நாட்டில் அதிர்ஷ்டவசமாக பண்டைத் தொழில்முறை (அதாவது குலத்தொழில்) பாதுகாக்கப்பட்டு வருவதனால் தான், இன்றைய அமைதியாவது காணப்படுகிறதாம். இந்த அமைப்பு மாறவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பைத்தியக் காரர்கள்தானாம்.

ஆச்சாரியாரவர்கள் வருணாசிரம தருமத்தைத்தான், குடும்பக் கலைப் பயிற்சி ? என்று கூறுகிறார். வெளுப்பவன் என்றைக்குமே பரம்பரையாக வெளுத்து வரவேண்டும். சிரைப்பவன் பரம்பரையும் அப்ப டியே! தெருக்கூட்டுபவன், மாடு மேய்ப்பவன், கக்கூஸ் எடுப்பவன் பரம்ப ரையும் அப்படியே செய்துவரவேண்டும். இதுதான் அவர்களின் குடும்பக் கலைப்பயிற்சி ! ஆரிய முன்னோர்கள் எழுதிவைத்த வருணாசிரம தர்மம்!

வாரத்தில் 3 நாள் சொல்லிக் கொடுக்கும் படிப்பு, எந்த அளவுக் குப் பலன் கொடுக்கும் என்பதை அவர் அறியாதவரல்ல! ஏதோ கட்டாய மாகப் படிப்புச் சொல்லிக் கொடுத்ததாகவுமிருக்க வேண்டும், அதே நேரத்தில் பலனைப் பார்த்தால் கல்லாதவர்களாகவும் ஆகியிருக்க வேண்டும். படிப்பிலேயே முழு நேரத்தையும் செலவழிக்கும்படியாய் செய்துவிட்டால், அப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட யார்தான், பிறகு அவர வர்கள் குலத்தொழிலை, இழிவு என்று மற்றவர்களால் கருதப்படுகிற தொழிலை உடலை வருத்தி உழைத்தாக வேண்டிய தொழிலைச் செய்ய முன்வருவார்கள் என்கிற கவலையைத் தவிர இந்தத் திட்டத்தில் வேறு என்ன நியாயமிருக்கிறது என்று சொல்லமுடியும்?

அதிர்ஷ்டவசமாக பண்டைத்தொழில் முறை பாதுகாக்கப்படு கிறது. அதனால் தான், அமைதியைக் காண்கிறோம் என்கிறார் ஆச்சாரி யார். இதனுடைய கருத்தென்ன? வெள்ளையர்களின் கூட்டுறவால், விஞ்ஞானக் கருத்துக்கள் கொள்ளை கொள்ளையாய்க் குடி புகுந்தாலும், அவையெல்லாவற்றையும் தடுத்து நிறுத்தக்கூடிய மூடப்பழக்க வழக்கங்களில் நம் நாட்டு மக்கள் மூழ்கிக்கிடக்கிறார்கள். மூடப்பழக்க வழக்கங்களுக்குக் காரணமான, மத, சாஸ்திர, புராண கருத்துக்கள், பகுத்தறிவைத் தூண்டும் கல்வி என்கிற கருவியைக் கொடுத்து விட்டால் என்ன பாடுபடும்? ஒவ்வொரு உழைப்பாளியும், உழைப்பின் உயர்வை யும், உழைப்பு வஞ்சிக்கப்படும் கொடுமையையும், தானாகவே உணர்ந்து விட்டால், இந்த நாட்டில் உல்லாச வாழ்வினர்க்கு அமைதியிருக்க முடியுமா? என்கிற கருத்தே தவிர வேறென்ன?

இந்த அமைப்பு (வருணாசிரமம் ) மாறவேண்டுமென்று ஆசைப் படுபவர்கள் பைத்தியக்காரர்கள் ! இது ஆச்சாரியாரின் முடிவு. ஆனால், வருணாசிரமக் கொடுமையால் வாழ்விழந்து, நடைப்பிணமாய் வாழும் மக்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? வருணாசிரமம் இருந்து வருவ தால், வரிசை வரிசையாய் உல்லாசபுரியில் உலவுகிறவர்கள் வேண்டு மானால் இதை ஒப்புக்கொள்ள முடியுமே தவிர, வேறு யார் இந்த முடிவை ஒப்புக் கொள்ள முடியும்? ஆச்சாரியாரவர்களின் இந்தத்திட்டம் அனுபவ சாத்தியமற்றது என்பதை, பொதுவாக எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், ஆச்சாரியார் அவர்களின் அந்தரங்கம் எப்படி இருக்கிறது என்பதைக் குறிப்பிடுவதற்காகவே இன்று . எடுத்துக்காட்டினோம்.

இந்த உருப்படாத, வக்கிரமான பிரசாரத்திற்கு அவர் காரணம் கூறுகிறார் "பெற்றோர்களின் பொருளாதாரக் கஷ்டமும் குறையும். சிறுவர்களின் இளம் மூளையில் குறிகளையும் வார்த்தைகளையும் திணித்து சுமை ஏற்றுவதும் குறையும்" இது அவர் கூறும் இரண்டு காரணம்.

வாரத்தில் 4 நாள் பெற்றோர்களுக்கு உதவியாய் உழைப்பதால் ஏழைகளின் பொருள் கஷ்டம் ஓரளவு குறையலாம். ஆனால், அந்த 3 நாள் கூட பள்ளிக்குச் செல்லாமல், எல்லா நாளுமே பெற்றோர்கள் இடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தால், இப்போது செய்து கொண்டி ருப்பதைப்போல, பெற்றோர்களுக்கு இதைக் காட்டிலுமல்லவா பொருள் கஷ்டம் குறையும். இது ஏனோ ஆச்சாரியார் அவர்களுக்கு விளங்க வில்லை! குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தருவது, ஒரு மொழியைச் சொல்லிக் கொடுப்பதே, பாவம் குழந்தைகளின் மூளையில், குறிகளை யும் வார்த்தைகளையும் திணித்துச் சுமை ஏற்றுவதாகும் என்று சொல்லுகிற ஆச்சாரியார், குழந்தைகளுடைய மூளையில் 3 மொழிகளுக் கான வெவ்வேறு குறிகளையும் வெவ்வேறு வார்த்தைகளையும் திணிப்பது நியாயம் என்று மற்றொரு பக்கத்தில் திணித்த கொடுமை யையும், இன்றும் அதற்கு ஆதரவாய் இருந்து வரும் அநீதியையும் பார்க்கிறோம்.

ஆகவே, ஆச்சாரியார் கூறும் இந்த 2 காரணங்களும் எப்படிப் பட்ட ஏமாற்றம் நிறைந்தது என்பதை விளக்க வேண்டியதில்லை. இதிலிருந்து ஆச்சாரியாரவர்கள் எவ்வளவுதான் பொது நலத் தியாகியாய உண்மை உழைப்பாளியாய் விளங்கினாலும்கட வருணாசிரம் அமைப்பில் அவருக்குள்ள ஆசை எவ்வளவு என்பது தெரிகறதா இல்லையா? என்று கேட்கிறோம்.

- குடிஅரசு - 13.08.1949.

 
Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.